இலங்கையில் ஆற்றில் இறங்கிய பொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்றது முதலை!
தென் மாகாணத்தில் உள்ள நில்வலா ஆற்றில் தவறி விழுந்த பொலிஸ் அதிகாரி ஒருவா் முதலையால் இழுத்துச் செய்யப்பட்டுள்ளாா்.
நாதுகல பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காணாமல் போயுள்ள பொலிஸ் அதிகாரியைத் தேடும் பணிகளில் கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா்.
பொலிஸ் அதிகாரியின் கைத்தொலைபேசி ஆற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் அதை எடுக்க முயன்றபோது அவரை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

