புதினங்களின் சங்கமம்

பத்தொன்பது தலைமை சிறை அலுவலர்கள் உடனடியாக இடமாற்றம்!!

இலங்கையில் உள்ள சிறைகளின் பத்தொன்பது தலைமை சிறை அலுவலர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷாரா உபுல்தேனியா தெரிவித்தார்.

இடமாற்றம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரியும் அடங்குவார் என்றும் அவர் , அவர் தலைமை சிறைச்சாலை பதவியில் இருந்து நீக்கப்பட்டு தும்பரா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்’

இதற்கிடையில் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் 06 புதிய தலைமை சிறை அதிகாரிகளை புதிதாகவும் நியமித்துள்ளார்.
அன்மையில் இலங்கையில் உள்ள சிறை அதிகாரிகள் கையூட்டு பெறுவதில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது