59 இலட்சம் ரூபா பண மோசடி; திசைகாட்டியின் முக்கியஸ்தர் சிறையில் அடைக்கப்பட்டார்!
இம்முறை ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் 59 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பாக நேற்றுக் (22) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மிளகு வியாபாரம் தொடர்பான பண பரிமாற்றத்தின்போதே முறைப்பாட்டாளிரிடம் பண மோசடி செய்தார் என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பண்டாரவளை பிரதேச நிதி குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி சந்தேக நபரைக் கைது செய்து பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

