புதினங்களின் சங்கமம்

யாழில் மூன்று மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு வந்த மதுசன் பலி!!

4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபொழுது பின்னுக்கு இருந்தவர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண ரஞ்சன் மதுசன் வயது 20 கரணவாய் தெற்கு என்ற இளைஞனே நேற்று காலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் மாணவனான அவருடைய இறப்பு கிராம மக்களுக்கு சோகமயமாக அமைந்துள்ளது.