விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடிய இலங்கைப் பைத்தியங்கள்!! (Photos)
மலையகத்தில் தென்னிந்திய நடிகர் விஜயின் பிறந்ததினக் கொண்டாட்டம்
மலையக மக்களுக்கு எத்தனை பிரச்சினைகள் சமகாலத்தில் காணப்படுகின்றது. இந்தநிலையில் இப்படிப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா???
ஊடகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மலையக மக்களின் வாழ்வாதாரப்ப பிரச்சினை சம்பளப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் மலையக இளைஞர்களின் இவ்வாறான பிறந்தநாள் கொண்டாட்டம் வெறுப்புக்குரியது.???
தென்னிந்திய நடிகர் வியஜின் பிறந்தநாளுக்கு முகநூல் முழுவதும் பிறந்தநாள் பதிவேற்றிய பலர் யூன் 21 கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தை மறந்து விட்டனர்???
நடிகர்கள் ஒருபோதும் ரசிகர்களை பிழையாக வழிநடத்தப் போவதில்லை நாம் தான் திரைகளில் காணும் முகங்களுக்காக ஏராளமான வீண் செலவுகளை செய்துகொண்டிருக்கின்றோம்
இப்படி வீண் செலவு செய்யும் பணத்தை சமூக சேவைக்காகவோ / தற்காலசூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாகவோ / வறுமையில் கல்வியை தொடரமுடியாத மாணவர்களுக்கு வீணாக செலவு செய்யும் பணம் மூலம் ஒரு சிறு உதவியை செய்தால் கூட அது பெரும் பலனை தரும்
நம் சமூகத்திலும் எத்தனை கலைஞர்கள் இலை மறை காயாக திறமைகளுடன் உள்ளனர் அவர்களை ஊக்குவியுங்கள் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சியெடுங்கள்.
எனவே நம்மில் மாற்றம் ஒனறு வேண்டும் அடுத்தவர்களுக்கு அடிபணியும் நிலை மாற்றமடைய வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயமுமாகும்!!!!!!




