புதினங்களின் சங்கமம்

அனைத்து பாடசாலைகளுக்கும் 20ஆம் திகதி விடுமுறை!

20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வரும் 21 ஆம் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 18 முதல் 24 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.