யாழில் பாதையை சீரமைப்பு செய்து கொண்டிருந்தவர் திடீரென மரணம்!
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும் குறித்த சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அருகில் சற்று முன் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடருந்துப் பாதைகளை சீரமைத்து
சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கமைய யாழ்ப்பாணத்தின் தொடருந்துப் பாதைகளும் தனியார் ஒப்பந்த தாரர்களால் சீரமைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான நடவடிக்கை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அவ்விடத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான றெஜினோல்ட் (வயது 37) என தெரியவந்துள்ளது.
மேலும் அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

