புதினங்களின் சங்கமம்

புற்று நோய் மருத்தில் 350 கோடி ஊழல் ; மயங்கி விழுந்த பணிப்பாளர்

நல்லாட்சி அரசின் ஊழல்களை விசாரணை செய்யும் கமிஷனில் ஆஜரான தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதிகார சபை பணிப்பாளர் விசாரணையின் போது மயங்கி விழுந்த நிகழ்வு பதிவாகி உள்ளது.

மஹரகம அபேக்‌ஷா புற்றுநோய் மருத்துவ மனைக்கு தரமற்ற புற்றுநோய் மருந்தை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதிகார சபை பணிப்பாளர் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்.

நல்லாட்சி அரசின் ஊழல்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 1 ம் திகதி தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதிகார சபை பணிப்பாளருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மோசடியினால் 350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள புற்றுநோய் வைத்தியர்கள் 27 பேர் குறித்த மருந்தை நிராகரித்த போதும் அதனையும் பொருட்படுத்தாமல் குறித்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி இருந்தன.

நல்லாட்சி அரசின் ஊழல்களை விசாரணை செய்யும் கமிஷன் அதிகாரிகள் பனிப்பாளரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.