போதை கடத்தல், மீன் பரிமாற்றங்களால் கடல் ஊடாக கொரோனா பரவும் ஆபத்து!!
நீண்ட தூர கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களால் இலங்கையில் கரையோர மக்கள் சுமூகத்திற்குள் கொரோனா பரவும் அபாயமுள்ளதாக எச்சர்ரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா,மாலைதீவு ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல்; அதிகரித்து வரும் நிலையில் குறித்த நாடுகளின் கடல் மாக்கம் ஊடாக இலங்கை கடற்பகுதிக்குள் மீனவர்கள் மீன் பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இலங்கை மீனவ கிராமங்களின் மக்கள் மத்தியில் சமூகத் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மன்னார் முதல் நீர் கொழும்பு வரையிலான கடற்பகுதியில் படகு மூலம் மோசடிகள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக இந்திய பெருங்கடல் ஊடாக கொரோனா வைரஸ் மீண்டும் இலங்கையில் கரையோர சமூகத்துக்குள் ஊடுருவும் ஆபத்து காணப்படுகின்றது.
கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் கடல் நடுவில், மீன் பரிமாற்றம், கஞ்சா, ஹெரோயின் உட்பட சட்டவிரோத பொருட்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கைகளை கைவிடுவதே அவர்களதும் அவர்கள் சார்ந்த சமூகத்தினதும் பாமுகாப்புக்கு சிறந்ததாக அமையும்.
தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் வடக்கு முதல் தெற்கு வரையான கரையோர சமூகம் மத்தியில் கொரோனா ஆபத்து ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

