புதினங்களின் சங்கமம்

சேவல் கூவினது குற்றமா??? வழக்கு விசாரணை நடாத்த நீதிமன்றம் தீர்மானம்!

பிரான்ஸில் சேவல் கூவுவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;பிரான்ஸின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘ஒலேரான்’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ள நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகுமாறு குறித்த நபரின் அயல் வீட்டில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.இளஞ்சேவல் பிரான்ஸ் நாட்டுச் சின்னம் என்பதால் இந்த வழக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.வழக்கினை தாக்கல் செய்துள்ளவர் செயிண்ட்-பியெர்ரெ-ஒலெரான் தீவில் உள்ள தனது சொகுசுப் பங்களாவில் விடுமுறையைக் கொண்டாட வந்தவர் எனக் கூறப்படுகின்றது.