புதினங்களின் சங்கமம்

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மாலை மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல் இதுவரை வெளியாகவில்லை.