யாழ்.அல்வாயில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டார்!
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இன்று இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த இரண்டு வயதுடைய ஆர்கலி என்ற சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுமி உணவு அருந்திக்கொண்டிருந்தவேளை மின்சாரம் தடைப்பட்டதாகவும் அவ்வேளை சிறுமி அழுத சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை என்றும் சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்வையிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், சிறுமி தாயுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் தந்தை தரப்பினர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தாயார் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.

