புதினங்களின் சங்கமம்

விவசாயிகளுடன் களத்தில் இறங்கிய யாழ் பல்கலைக்ககழக கலைப்பீட மாணவர்!! மகிழ்ச்சியில் யாழ் மக்கள்!!

கொரோனா மக்களின் மனத்தை பாரிய அளவு மாற்றியுள்ளதற்கு சான்றாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யாழ் மக்களால் அண்மைக்காலமாக வெறுக்கத்தக்க வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டதாகக் கருதப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் என்ன செய்கின்றார்கள் பாருங்கள்…..

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அணியின் முகப்புத்தகத்தில் வெளியாகிய பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

 

 

கொரோனா பரவலை அடுத்து நடமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

குறித்த மாணவர்களின் புதிய முயற்சியால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்ததுடன், தரிசு நிலங்களில் விவசாயம் செய்வோம் என்ற முன்னுதாரண செயற்பாட்டினையும் செய்து காட்டியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. இதனால் பல குடும்பங்கள் வருமானங்களை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டது.

வருமானம் இழந்த குடும்பங்களுக்கான உலர் உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை மாணவர் ஒன்றியம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தது.

இந்நிலையில் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்வதற்கான புதிய முயற்சி ஒன்றினை எடுத்து, அந்த முயற்சியை இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாக காட்டுவதற்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் கீரிமலை பகுதியில் காணப்பட்ட 10 பரப்பு தரிசு நிலத்தினை மேம்படுத்தி அதில் விவாசாய செய்கையினை முன்னெடுத்து வந்தனர்.

அங்கு பயிரிடப்பட்ட மிளகாய், கீரை, கரட், பூசணி போன்ற மரக்கறிகளை இன்று அறுவடை செய்யப்பட்டன. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் அனைத்தும் ஊர்காவற்றுறையில் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இவ்வாறான புதிய முயற்சி ஒன்றினை செய்து அதில் வெற்றி கண்ட மாணவர்கள் தெரிவிக்கையில்:-

இலங்கையில் பல தரிசு நிலங்கள் காணப்படுகின்றது அதனை இளைஞர்கள் கவனத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் விவசாயத்திற்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Image may contain: one or more people, people standing, tree, sky, plant, grass, outdoor and natureImage may contain: one or more people, tree, sky, plant, outdoor and natureImage may contain: sky, tree, cloud, grass, outdoor and natureImage may contain: one or more people, plant, outdoor and natureImage may contain: plant, outdoor and natureImage may contain: foodImage may contain: flower and foodImage may contain: one or more people, people standing, shoes and outdoorImage may contain: one or more people, outdoor and foodImage may contain: one or more people, sky, tree and outdoorImage may contain: 2 people, food and outdoorImage may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standing and outdoorImage may contain: one or more people, plant, tree, child, outdoor and natureImage may contain: 5 people, people sitting, tree and outdoorImage may contain: 1 person, standing and outdoor