யாழில் இரவு தூங்குவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தூக்கத்திற்கு சென்ற குடும்பஸ்தரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் தூக்கத்திற்கு சென்றதாகவும், காலையில் நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்து அவர் எழுந்திருக்காமையினால் உறவினர்கள் அவரை எழுப்ப முற்பட்டுள்ளனர்.
இதன்போதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கந்தசாமி ஜெயராசா (வயது 54) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுன்னாகத்தினை பிறப்பிடமாக கொண்டு அராலி மேற்கில் வசிக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்து வசித்து வந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

