யாழ்ப்பாணக் கள்ளு கனடாவில்!! தமிழுக்கு தடை!! சிங்கள போதை!! (Photos)
யாழ்ப்பாணத்து பனங்கள்ளு Liquor Control Board of Ontario இன் அனுமதியுடன் கனடாவில் சந்தைப்படுத்தி வருகினறார் ஒரு ஈழத்து முயற்சியாளர் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1989 களில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த சண்முகநாதன் சுகந்தன் பின் நாட்டுக்கு திரும்பி தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை ஆராயும் போது பனையை நம்பி வாழும் சமூகங்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் ஈழத்து பனையையும் சர்வதேச அரங்கில் இடம்பெற செய்ய வேண்டும் என திடசங்கற்பம் கொள்கிறார்.
இங்கு பதநீர், கள்ளு, பனஞ்சாராயம் ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதனை அவதானிக்கிறார். போத்தல்களில் இருந்து லேபிள் வரை பிரச்சினையாக இருந்தது.இவற்றுக்கென தனியே சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் பிரிவுகளை உருவாக்கி இங்கு திறம்பட செயற்படும் பனை கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து தூய கள்ளை பெற்று அதற்கென புதிய போத்தல்களையும் கொழும்பில் இருந்து பெற்று, லேபிளையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கி பதநீர், கள்ளு, சாராயத்தை போத்தலில் அடைத்து விநியோகத்தை மேற்கொண்டார்.
முதலில் ஆயிரக்கணக்கான லீட்டர் பதநீரை போத்தலில் அடைத்து விநியோகிக்கும் போது இலங்கை முழுவதுமிருந்து அதற்கு பெரு வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து கள்ளை பெரியதொரு கொள்கலன் ஊர்தியில் எடுத்துச் சென்று வெளிமாவட்டங்களில் விநியோகம் செய்தார் அதற்கும் பெரு வரவேற்பு கிடைத்தது.VSS Distributors என்கிற தனது நிறுவனமூடாக இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முன்னணி ஹோட்டல்களில் இருந்து சர்வதேச அரங்கு வரை இன்று கள்ளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்.குழந்தைக்கு தேவையான போசனைக்கூறுகள் பல பதநீரில் உள்ளது அதே போல் கள்ளிலும் பல்வேறு போசனைக் கூறுகளும், நோயெதிர்ப்பு சக்திகளும் உள்ளன கனடாவிலிருந்து வந்து, ஈழத்தில் வெற்றிகரமாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்து வரும் சுகந்தன் எம்மவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சுகந்தன் தமிழரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறித்த கள்ளுப் போத்தல்களில் தமிழைக் காணவில்லை என தமிழ் உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.