புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் காரைத் திருடிய தமிழ் இளைஞன்!!ஹெலியில் துரத்திப் பிடித்த பொலிசார்!! (Video)

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச்
செல்லும் போது பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இது செப்டம்பர் 16 அன்று மாலை 4:30 மணிக்கு முன்பு நடந்தது. திருடப்பட்ட 2019
மெர்சிடிஸ் கார் வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது திருடப்பட்டதாக
பிராந்திய காவல்துறை தெரிவித்தது.

முதலில் ஒரு பொலிஸ் ரோந்து கார் வாகனத்தை நிறுத்த முயன்றது, ஆனால் அதனால்
கார்திருடரை துரத்துவது போக்குவரத்து நெரிசலான நேரத்தில் சாத்தியமாகவில்லை. மேலும்
காரைத்திருடியவர் அதிகவேகமாக காரைச் செலுத்தியதால் பொலில் கெலிகாப்படர்
வரவழைக்கப்பட்டு துரத்துதல் தொடர்ந்தது. பட்டப்பகலில் திரைப்படங்களில் வரும் துரத்தல்
காட்சிகளைப்போல இது இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

 

அந்த நேரத்தில், சந்தேகத்திற்கிடமான வாகனம் பீல் பிராந்தியத்தில் அதிக வேகத்தில்
பயணித்ததாகவும், பல சிவப்பு விளக்குகள் வழியாக ஓட்டியதாகவும், வஅருகிலுள்ள தடைகள்
மற்றும் நடைபாதைகளின் மீதாக வாகனத்தை ஏற்றிச்சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஹெலிகாப்டருக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ, திருடப்பட்ட வாகனம் இறுதியில்
மற்றொரு காரில் மோதியதைக் காட்டுகிறது. மோதிய வாகனத்தின் டிரைவர் சிறு காயங்களுடன்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கார்திருடர் தனது காரிலிருந்து வெளியேறி வீதியால் மற்றவாகனங்களைக் கடத்த முற்பட்டார்.
பின்னர் அருகிலுள்ள மருந்தகத்தில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பிராம்ப்டன் நகரைச் 20 வயதான சுபீதன் உதயகுமார் மீது, 5,0000 டொலருக்கும் அதிகப்
பெறுமதியான பொருளைத்திருடியமை, விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பி ஓடியமை, மற்றும்
5,000 டாலருக்கும் அதிகமான திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டுள்ளன. இவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.