கிசு கிசு

இளைஞருடன் கள்ள உறவில் இருந்த மனைவியின் தலையை வெட்டிய கணவன்…

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே
எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28).
இவருக்கும் நிவேதா(19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இருவரும் வேப்பம்பாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், முனியப்பன்
நேற்று வேலைக்கு சென்று விட்டு விரைவாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது
மனைவி வேறொரு இளைஞருடன் தவறான உறவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவருக்கும், நிவேதாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர்
நிவேதாவை அவரது தாய் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி, தனது இருசக்கர வாகனத்தில்
அவரை முனியப்பன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டு வலசு பகுதியில் அவர்களது வாகனம் சென்று
கொண்டிருந்தபோது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில்
ஆத்திரமடைந்த முனியப்பன், தான் கொண்டு வந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட சண்டையில் முனியப்பனின் காது அறுபட்டது. எனினும் நிவேதாவை கொலை செய்த
முனியப்பன், அவரது தலையை துண்டித்துள்ளார். மேலும் அவரது உடலையும், தலையையும்
தனித்தனியே எடுத்துக் கொண்டு தனது வாகனத்தில் சென்றுள்ளார்.

போகும் வழியில் முனியப்பன் வாகனத்தை திருப்பியபோது, வீட்டு சுவரின் மீது மோதியதால் கீழே
விழுந்துள்ளார். அப்போது சடலத்துடன் அவரைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல்
அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் முனியப்பனை கைது செய்ததுடன்,
நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவியின்
தலையை அறுத்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம், பெருந்துறையில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.