புதினங்களின் சங்கமம்

ஈரான் கடற்படை கப்பலில் இருந்தவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை! இலங்கைக்கு எதிராகவும் போர் தொடுக்குமா அமெரிக்கா?

இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரானிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.

சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

– வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவிப்பு

#CFNews

இந்தியாவில் நடைபெற்ற MILAN-2026 சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் IRIS Dena போர்க்கப்பல், இன்று (மார்ச் 4, 2026) அதிகாலை இலங்கையின் காலி அருகே கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. சுமார் 180 மாலுமிகளுடன் பயணித்த இந்தக் கப்பல், காலியில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிக்கியதையடுத்து அவசர அழைப்பை விடுத்தது.

உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, கப்பலில் இருந்தவர்களில் 30 மாலுமிகளைப் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளன. சர்வதேச கடல்சார் ஒப்பந்தங்களின்படி இந்த மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் மற்ற சில கப்பல்கள் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தாலும், IRIS Dena விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

#CFNews