உலகெங்கும் 50 லட்சம் பேர் கொரோனாத் தொற்றுக்கு இலக்கு!!
உலகெங்கும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 148 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தனது புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 678 பேர் உயிரிழந்துள்ளனர். கொடிய தொற்று நோயிலிருந்து 19 லட்சத்து 79 ஆயரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 991 தொற்றாளர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக ரஷ்யா 30 லட்சத்து 8 ஆயரத்து 705 பேருடனும், பிரோஸில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேருடனும்,
இங்கிலாந்து – 2 லட்சத்து 51 ஆயிரத்து 290 பேருடனும்
ஸ்பெயின் – 2 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேருடனும்
இத்தாலி – 2 லட்சத்து 27 ஆயிரத்து 364 பேருடனும்
பிரன்ஸ் – ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 575 பேருடனும்
ஜேர்மனி – ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 545 பேருடனும்
துருக்கி – ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 587 பேருடனும்
ஈரான் – ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 949 பேருடனும்
இந்தியா – ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 28 பேருடனும்
பெரு – ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 20 பேருடனும் பட்டியலிடப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களது பட்டியலிலும் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அங்கு 94 ஆயிரத்து 994 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

