திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளை 25 பேருக்குள் மட்டுப்படுத்தியவாறு நடத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தொற்று நோய் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகளில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
நிகழ்வுகள் 25-க்கு அதிகமானவா்கள் ஒன்றுசோராத வகையில் ஒழுக்கமைப்பட வேண்டும். நிகழ்வுகளில் ஒன்றுகூடுவோா் முக கவசம் அணிய வேண்டும். அத்துடன் நபா்களுக்கிடையில் ஒரு மீற்றா் இடைவெளியைப் பேண வேண்டும்.
அதே சமயம் கட்டிப்பிடிப்பது, கைகுலுக்குவது ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழையும் அனைத்து விருந்தினர்களின் உடல் வெப்ப நிலை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். அல்லது திறந்த வெளியில் நிகழ்வு ஒழுக்கமைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வுகளுக்கு முன்பும் பின்பும் நிகழ்விடம் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரேனா வைரஸ் தொற்று நோயைத் கட்டுப்படுத்தும் நோக்குடன் மார்ச் 11 முதல் இலங்கை அரசு பல்வேறு சமூக முடக்கல் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது கட்டுப்பாடுகள் மெல்லத் தளா்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





