புதுக்குடியிருப்பில் குற்றவாளி வராததால் பிணைவைத்த பிரதேச சபை உறுப்பினர் கைது.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் (14) நேற்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினரான ஆறுமுகம் ஜேன்சன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறை மீறல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பிணைவைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிணைவைத்த பிரதேச சபை உறுப்பினரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

