யாழ் பல்கலை மாணவர்களான நெருங்கிய நண்பர்கள் ஒரே யுவதியுடன் காதல்!! நடக்கப் போவது என்ன?
மனநல மருத்துவரை நாடிய யாழ் பல்கலைக்கழக மாணவன் தனது நண்பனும் தான் காதலிக்கும் பெண்ணைக் காதலிக்கின்றான் எனவும் அதற்கு என்ன செய்வது எனவும் ஆலோசனை கேட்டுள்ளான். அவனது கேள்வியும் மனநல வைத்தியரின் பதிலும் இங்கு தரப்பட்டுள்ளது.
*பிரகாஷ் (24)*
*யாழ்.பல்கலைகழகம்*
நான் இப்போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றேன். அங்கு எனக்கு ஒரு உயிர் நண்பன்
இருக்கின்றான். பிரச்சினை என்னவென்றால் துரதிர்ஷ்டவசமாக நாம் இருவரும் ஒரே பெண்ணையே
காதலிக்கின்றோம். இது அண்மையில்தான் எனது நண்பன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ‘என்
காதலை எப்படியாவது விட்டுக் கொடுத்து விடு’ என்று அவன் என்னிடம் கெஞ்சுகின்றான். காதலை
விட்டுக் கொடுக்க என்னாலும் முடியாமல் உள்ளது. அதேநேரத்தில் எனது நண்பனும் எனக்கு
முக்கியம். நட்பா? காதலா? என்று திணறுகின்றேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்?
பதில்- அன்புத் தம்பி! நீர் உண்மையில் உமது பிரச்சினையைக் கூறுகின்றீரா? அல்லது தமிழ்
சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா? என்று எண்ணத் தோன்றுகின்றது. உமது நிலை பற்றிய
இரண்டு, மூன்று தமிழ் சினிமாக்களை நான் பார்த்துள்ளேன். (பெயர்கள்தான் ஞாபகத்திற்கு வரவில்லை)
இருந்தாலும் ஒரே பெண்ணை நீங்கள் இருவரும் காதலிக்கின்றீர்கள். அந்தப் பெண்ணும் உங்கள்
இருவரையும் காதலிக்கின்றாரா? ஏனெனில் இப்போது நம்மூர் பெண்கள் Face bookஇல் ஒரு காதல்,
Whats appஇல் ஒரு காதல், Phoneஇல் ஒரு காதல் கல்யாணத்தின் பின் வேறொரு காதல் எனத்
திரிகின்றார்கள். நீங்கள் இருவரும் காதலிக்கும் அந்தப் பெண் உங்கள் இருவரையும் தவிர்த்து
வேறொருவரைக் கூடக் காதலிக்கலாம். எனவே அவரது காதல் என்ன என்பதை முதலில் அறிந்து
கொள்ளுங்கள்.
உண்மையில் அப்பெண் உம்மைத்தான் உயிராய் காதலிக்கின்றார் எனின் உமது நண்பனுக்கு உங்கள்
இருவரதும் காதலைப் புரிய வையுங்கள். உண்மையான நண்பனாக இருந்தால் அவர் அதைச் சரியாகப்
புரிந்து கொள்ளுவார். இல்லை அப் பெண் உமது நண்பனைத்தான் நேசிக்கிறார் எனின் அவர்களது
காதலை வளர்த்து விடுவதே ஒரு உண்மையான நண்பனுக்கு அழகு. எனவே இப் பிரச்சினைக்கான
தீர்வென்பது உங்களது காதலியின் நிலைப்பாட்டையும், உங்கள் இருவரினதும் உண்மையான, பண்பான
நட்பையும் பொறுத்து இலகுவில் தீர்க்கக் கூடிய ஒன்றே.
சகோதரா! மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியே விட்டுக்கொடுப்பிலும், தியாகிப்பிலும்தான்
அதிகமாக உள்ளது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தமது
பிள்ளைகளுக்காக எவ்வளவு தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் இழப்புக்களையும்,
சந்திக்கின்றார்கள்? இவை பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவது இல்லை. மாறாக பிள்ளைகளின்
மகிழ்ச்சியைப் பார்த்துத் தாம் மகிழ்கின்றார்கள்.
எனவே எமக்கு வேண்டியவர்களுக்காக விட்டுக் கொடுப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும்
செய்கையில் உண்மையில் ஆத்மார்த்தமான மனத் திருப்தியும், மகிழ்ச்சியும், உயர்ந்த மனப்பாங்குமே
ஏற்படுகின்றது. எனவே களநிலைகளைக் கவனத்தில் கொண்டு உயர் மனிதனாக வாழ விழைவதே
உண்மயான வாழ்க்கையாகும்.