யாழ் பரமேஸ்வரா சந்தி பெற்றோல்சயிறில் ஐயர் கலைக்கப்பட்டார்! பாதிரியாரும் பிக்குவுக்கும் முன்னுரிமையில் பெற்றோல்!!
சற்றுமுன் யாழ் பரமேஸ்வரா சந்தியில் உள்ள எஸ்.பி முருகேசுவுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த சம்பவம் இது. அதிகாலை தொடங்கி நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக பெருமளவானவர்கள் தமது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்ளை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு கோவில் குருக்கள் ஒருவர் வந்து வரிசையின் முன்னால் நிற்க அனுமதி கேட்டார். ஆனால் வரிசையில் நின்ற பொதுமக்களும் எரிபொருள்நிரப்பு ஊழியர்களும் அவரை துரத்திவிட்டனர். ஆனால் 12 மணியளவில் புத்த பிக்கு ஒருவர் வரிசையில் நிற்காது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் வாகனத்தைச் செலுத்திச் சென்றார். அங்கு நின்ற அனைத்து ஊழியர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் மிகவும் பணிவாக நின்றனர். இதனைப் அவதானித்த ஒருவர் இது தொடர்பாக கேள்வி எழுப்ப முற்பட்ட போது பெற்றோல் நிரப்பு ஊழியர்கள் அவரை அவமானப்படுத்தி எச்சரித்துள்ளார்கள். அத்துடன் அந்த புத்த பிக்குவுக்கு ‘பெற்றோல் வரும் போது உங்களுக்கு சொல்லுகின்றோம், அதன் பின்னர் வாருங்கள்‘ என கூறி அவரை அனுப்பிவிட்டார்கள். சற்று நேரத்தின் முன்னர் நண்பல் 2 மணியளவில் எரிபொருள் விநியோகம் தொடங்கியது. பாதிரியார் ஒருவர் தற்போது வரிசைகளை மீறி குறித்த பெற்றோல் நிலையத்தில் முன்னுரிமையில் பெற்றோல் அடித்து செல்கின்றார். இவ்வளவுக்கும் குறித்த பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பிள்ளையார், சிவபெருமான், முருகன் போன்ற தெய்வத்தின் புகைப்படங்களுக்கு பூ வைத்து விளக்கும் வைத்துள்ளார்கள். இந்த கொடுமையை யாரிடம் சொல்லி கதற…….
