அறிகுறி இன்றி கொரோனா பரவல் அதிகரிப்பு: ஊரடங்கு தளர்விலும் சமூக இடைவெளியை பேண வலியுறுத்தல்!!
இலங்கையில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இன்றி கொரோனா பரவல் அஅதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வு நேரத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றியவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

