சிவபெருமானும் புத்தனும் பேய்கள்!! யாழ்ப்பாணத்தில் கூறியவர்களுக்கு நடந்த கதி இதோ!!
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர்.
சிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர் சாத்தான்கள் என்று கூறியதனாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.