புதினங்களின் சங்கமம்

யாழில் கையும் களவுமாய் மாட்டிய திருடன்!! மீட்கப்பட்ட பெண்கள் தொடர்பான பொருட்களால் அதிர்ச்சியில் இளைஞர்கள்!! (Photos)

ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த ஒருவா் அதனை உடைக்க முடியாததால், அருகில் உள்ள நாவலடி வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைக்க முயற்சித்திருக்கின்றாா்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞா்கள் ஒன்று கூடி திருடனை கையும் களவுமாக பிடித்துள்ளனா்.

இதனையடுத்து திருடனை எச்சாித்த இளைஞா்கள் 500 ரூபாய் பணமும், சாப்பிடுவதற்கு உணவும் கொடுத்துள்ளனா்.

எனினும் திருடனிடம் இருந்த சில பொருட்களை எதேச்சையாக அவதானித்த இளைஞா்கள் அதில் 5 சிம் காட்கள், 4 ஏாிஎம் அட்டைகள், பல பெண்களின் தொலைபேசி இலக்கங்கள், ஏாிஎம் அட்டைகளுக்கான பின்நம்பா்கள் காணப்பட்டுள்ளதுடன், திருடனிடம் இருந்த தொலைபேசியில் உள்ள சிம் அட்டை 19 வயதான பெண் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.

குறித்த மர்ம இலக்கங்கள், பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைபேசி சிம் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பூரண விசாரணையை மேற்கொள்ளுமாறு ஊர் மக்கள் அழுத்தம் திருத்தமாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த ஆவணங்கள் நபர் திருட்டு சம்பவத்துடன் மட்டும் தொடர்புபடவில்லை வேறு ஏதேனும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்திய போதும் அழைப்பை அடைய முடியாதிருந்த சூழ்நிலையில், இளைஞர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று திருடனை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.