தொற்றுக்கு உள்ளான கடற்படை பெண்ணின் கணவரான இராணுவ கப்டனுக்கும் கொரோனா!
சீதுவை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தின் கப்டன் தர அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவ அதிகாரியின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இவருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த முகாமில் இராணுவத்தினர் 150 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

