கொரோனா காம மையங்களாகவும் , உடலுறவுக் களமாகவும் யாழ்ப்பாண பஸ்கள் (Photos)
யாழ்ப்பாண பஸ்களில் உள்ள நெருகம் கொரோனா பல்கிப் பெருகுவதுற்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளதை இந்தப் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் உலாவரும் இந்த படங்களை பார்க்கும்போது, கொரோனா அபாயத்தை எம்மவர்கள் இன்னும் உணரவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது.
பேருந்தில் பயணிப்பவர்களுக்கு அதன் அனுபவம் பற்றி சொல்லத்தேவையில்லை. சுத்தம் என்பது பூச்சியம். எந்தளவிற்கு மக்களை பேருந்தில் திணிக்கலாமோ அந்தளவிற்கு திணிப்பது மட்டுமன்றி, ஒரு வாரம் துவைக்காத சட்டையோடு, அழுக்கு தோய்ந்த உருவமாக நடத்துநர் (கண்டக்டர்) இங்கும் அங்கும் மக்கள் மேல் எருமை போல ஏறிச்செல்வார்.
கேட்டால், இறங்கி காரில் போ என்பார்கள்.
அரசாங்கம் என்னதான் அறிவுறுத்தல் வழங்கினாலும் நாங்கள் அதை கடைபிடிப்பதாக இல்லை. அப்படியானால் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.
எதையாவது பயன்படுத்தி இதனை இப்போதே தடுக்காவிட்டால், நாளை இன்னொரு சீனாவாகவோ இத்தாலியாகவோ ஏன் இன்னொரு அமெரிக்காவாகவோ மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.






