மார்க்ஸ் எடுக்கும் நேரத்தில் மாஸ்க் தைக்கும் யாழ்ப்பாண மாணவன்!! (Photos)
உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா நோயில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக அனைவரும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்காக வீடுகளில் இருக்கும் போதே முகத்திரை (மாஸ்க்) அணிந்திருக்க முயற்சிக்கின்றனர்.
இதனால் தற்போது கடைகளில் மாஸ்க் இல்லை. 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மாக்ஸ் தற்போது 150 ரூபாவுக்கு மேல் விற்கப்பட்ட போதிலும் கடைகளில் முடிவடைந்துவிட்டது.
நிலையில், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் வி.தனுஜன் என்ற மாணவன் தனது குடும்பத்திற்கு மாஸ்க் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.




