நினைவேந்தல் (Memorialisation) என்பது நினைவஞ்சலியில் (Remembrance) என்பதிலிருந்து வேறுபட்டது
இவ் நினைவேந்தல் (Memorialisation) என்பது நினைவஞ்சலியில் (Remembrance) என்பதிலிருந்து வேறுபட்டது
அதே போன்று நினைவேந்தல்கள் நீத்தார் நினைவு மட்டுமன்றி அவை நடந்தேறிய நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சிகளாக இருக்கின்றன
குறிப்பாக இந்த கூட்டு நினைவுகள் (Collective memory) சமூகமொன்றின் மனங்களில் நிலைத்து நிற்க வேண்டிய இயங்கியல் தொடர்பானதாக இருக்கின்றது
அந்த வகையில் 21 மார்ச் 2006 இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா சபையின் பொதுச் சபை தீர்மானத்தில் பாதிக்கப்பட்ட மக்களை திருப்தி செய்வதன் ஓர் அங்கமாக நினைவேந்தல் (Memorialisation) அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது
அண்மைக்காலங்களில் நினைவேந்தலை ஒரு மனித உரிமையாகக் கருதும் தன்மையும் உருவாகியுள்ளது
அதாவது நினைவேந்தல் நிகழ்வுகள் கலாசார உரிமையின் ஓர்அங்கமாகசர்வதேசமனித உரிமைகள் பரப்பில் அங்கீகாரம் பெற்று வருகின்றன
சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR) இன் 15ஆவது சரத்தின் கீழான கலாசார உரிமையின் ஓர் அங்கமாக, நினைவேந்தல் பொருள்கோடல் செய்யப்படுகிறது.
.
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் தலங்களாக மாறி இருக்கின்றன
அதே ‘ஹோலகோஸ்ட்’ அருங்காட்சியகங்களும் நினைவுச்சின்னங்களும் எழுப்பப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலம், உலகின் பல நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது.
இந்த வகையில் தமிழர்கள் , தங்களின் நினைவேந்தலை கூட்டு நினைவாக அனுஷ்டிப்பதற்கான உரிமையை கொண்டு இருக்கின்றார்கள
அரசியல் ஊடாட்ட வெளிக்கு வெளியே நினைவேந்தல்கள் ஒருபோதும் இருக்க முடியாது.
தனி மனித கூட்டு ஆற்றுப்படுத்தலுக்கும் இழப்புகளை நினைவு கூர்வதும் நினைவுகளைப் தொடர்ச்சியாகவே பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எங்கள் உரிமையுமாகும்.
இதை தடை செய்ய முயற்சிப்பது முழுமையான மனித உரிமை மீறலாகும்
இங்கே நினைவேந்தல்களை ‘பொது சுகாதார’ பிரச்சினையாக கருதும் தரப்புகள் Criminal Procedure Code யின் Chapter IX ஆவது படிக்க வேணும்