புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் யாழ் குடும்பம் ஒன்றில் அனைவருக்கும் கொரோனா!! தாயார் புஸ்பராணி பலி!! (Photos)

தமிழ் புது வருடம் பிறந்து புலம்பெயர் நாடுகளில் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட தமிழர்களை பலி எடுத்துள்ளது.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அன்புத் தமிழ் உறவுகளே!

இந்தக் குடும்பத்தின் தந்தை பிரம்டன் வைத்தியசாலையில் இரண்டு வாரகாலத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுய நினைவுகள் அற்ற நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ளார். தாயார் ஒரு வாரத்திற்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு.. இன்றைய தினம் மதியம் மரணமாகியுள்ளதாக அறிமுடிகிறது.

3 பெண் பிள்ளைகளைக் கொண்ட இந்த குடும்பத்தில், பிள்ளைகள் அனைவருக்கும் நோய்ப் பாதிப்பு உள்ளாதாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தையார் விரைவில் குணமாகி வீடுதிரும்ப அனைவரும் வேண்டுவோமாக.!!

இந்த நோய் வெறும் வேடிக்கையானதல்ல; எம்மில் பலர் இந்நோயை பெரும் விடயமாகக் கருதவில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தமிழர் சமூகத்தொற்றுகுள்ளும் இருக்கிறார்கள். பலர் வெளிப்படுத்தவில்லை என்பது நிச்சயம். தேவையற்ற வேலைகளுக்கு வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவுத் தேவைகளுக்காக ஒருவர் மட்டும் பாதுகாப்பு முறைகளைச் சரிவர கையாண்டு வெளியே சென்றுவாருங்கள். முடிந்தவரை வியாபார நிலையங்களில் செலவிடும் நேரங்களைக் குறையுங்கள்.

Image may contain: 1 personImage may contain: 1 person, sitting