முல்லைத்தீவில் காட்டில் விறகுவெட்ட சென்றவரை கட்டிவைத்து அடித்து இராணுவம் ! (Photos)

காட்டில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தப்பட்ட குடும்பஸ்த்தர் சட்டத்திற்கு மாறான ஒன்றையு ம் செய்யவில்லை. என சுட்டிக்காட்டிய புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்படி குடும்பஸ்த்தரை விடுதலை செய்திருக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு- மருதங்குளம் பகுதியில் வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் விறகு வெட்டச் சென்ற நிலையில் காட்டில் வைத்து அடித்து நொருக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே இளைஞனை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப் பட்ட இளைஞன் கருத்து தொிவிக்கையில், வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுக்குள் சென்றிருந்த நிலையில், காட்டுக்குள் இராணுவம் நிற்பதை கண்டேன்.

இதனையடுத்து நான் வீட்டுக்கு திரும்பினேன். அப்போது படையினர் துரத்திவந்து என்னை பிடி த்தனர். பின்னர் காட்டுக்குள் இழுத்து சென்று கைகள், கால்களை கட்டி அடித்தார்கள். என இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்த்தர் கூறியுள்ளார்.

குறித்த குடும்பத்திற்கு இதுவரை நிதந்த வீட்டுத்திட்டமோ அடிப்படை வசதிகளோ அற்ற நிலையில் தற்காகலி கொட்டில் ஒன்றிலேயே வறுமையின் நிமித்தம் வாழ்ந்து வருகின்றார்கள் குடும்பஸ்தர் நாளாந்தம் கூலிவேலை செய்தே வாழ்ந்து வரும் நிலையில்

ஊரடங்க சட்டம் வேளை வேலைக்கு செல்லமுடியாத நிலையில் கிராமத்தில் கொடுக்கப்பட்ட உணவுப்பொதியினை கொண்டு தனது குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்டிற்குள் சென்ற தன்னை படையினர்

கட்டிவைத்து தாக்கியுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தாயாரிக்கும் கோடா பெரல்கள் காட்டிற்குள் காணப்பட்டதுள்ளன அதில் தன்னை இருந்து படையினர் படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அதன் பின்னர் இரவு 9.00 மணியளவில்

புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் தன்னை ஒப்படைத்துள்ளதாகவும் படையினர் மீது நான் தாக்குதல் நடத்தியுள்ளதான பொய் முறைப்பாடு ஒன்றினையும் படையினர் பொலீசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.காட்டிற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என

மனை அருகில் உள்ளவர்களை அழைத்து சென்று தேடியும் கிடைக்காத நிலையில் இரவு கிராம அமைப்பின் தலைவர்களை கொண்டு பொலீஸ் நிலையம் சென்றபோது புதுக்குடியிருப்ப பொலீசிடம் படையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

கிராம அமைப்பின் தலைவர்கள் குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் பொலீசாருக்கு நிலமையினை எடுத்துரைத்துள்ளதுடன் களவோ சட்டவிரோத செயற்பாடுகளிலோ இவர் ஈடுபடவில்லை என்று எடுத்துரைத்துள்ளதை தொடர்ந்து பொலீசார் குறித்த நபரை விடுவித்துள்ளார்கள்.

கண்ணிற்கு மேல் காயமடைந்த நிலையிலும் கைவிரல் ஒன்று ஏலாத நிலையிலும் வறுமைக்கு மத்தியிலும் தனதுகுடும்பத்தின் உணவிற்கு என்ன செய்வது என்று தெரியா நிலையில் குறித்த குடும்ஸ்தர் வாழ்ந்து வருகின்றார். மருதங்குளம் பகுதியில் காட்டிற்கு

விறகு வெட்டுவதற்காக பெண்கள் கூட செல்லமுடியாத நிலை காணப்படுவதாக குடும்ப பெண்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.காட்டிற்குள் படையினர் வந்து படுத்து கிடப்பதாகவும் விறகு வெட்ட செல்லும் பெண்கள் அவர்களை கண்டு அச்சம் அடைவதாகும் குடும்ப பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பரவலினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் முடக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கு உதவுங்கள்..

 

Image may contain: outdoor and nature Image may contain: one or more people and close-upImage may contain: one or more people, tree, outdoor and nature

error

Enjoy this blog? Please spread the word :)