இலங்கையில் கொரோனாவுக்குப் பலியான முதலாவது மருத்துவர் கயான் தந்தனாராயண !
இலங்கையில் கொரோனாவுக்குப் பலியான முதலாவது மருத்துவர் !
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று பதிவாகியது.
கராபிடிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்றுவந்த டொக்டர் . கயான் தந்தனாராயண இன்று உயிரிழந்தார்.
இறக்கும் போது அவருக்கு 31 வயது மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது. நுகேகொடை லைசியம் பாடசாலையின் பழைய மாணவரான மருத்துவர் கயான் சீனாவில் மருத்துவ பட்டத்தை முடித்திருந்தார்.
இதனையடுத்து கொரோனாவால் பீடிக்கும் வரை ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்தார். இந்த மருத்துவர் ஆரம்பத்தில் அங்கொடையிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் கொவிட் நிமோனியா மற்றும் நீரழிவுநோய் காரணமாக சிக்கலான நிலை ஏற்பட்டதையடுத்து மேலதிக சிசிச்சைக்காக காலி கராபிடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
உயிரிழந்த மருத்துவரின் உறவினர்கள் பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



