புதினங்களின் சங்கமம்

இன்னும் சற்று நேரத்தில் யாழ் ஊறணியில் சூரியன் உச்சம் கொடுக்கப் போகின்றது!!

வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் இன்று நண்பகல் 12.12 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

“சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5ஆம் திகதியிலிருந்து வரும் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (09ஆம் திகதி) குருக்கெப்பெட்டியாவ, பொத்துவெவ, பொல்கஹகங்கொட, உல்பொத்தவெவ, கிழக்கு மாகாணம் – ஆவட்டாவெளி மற்றும் வடக்கு மாகாணம் – ஊறணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது” என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.