மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற கொடூரம்!! வைத்தியரால் கொலை செய்யப்பட்ட சிசு!! (Photos)
மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியரின் கவனயீனத்தால் பொறுப்பற்றதன்மையால் பறிக்கப்பட்ட சிசுவின் தந்தையின் ஆதங்கத்தின் குரல்!!!
தமது மனைவியிற்கு பிரசவ காலத்தை தாண்டி ஐந்து நாட்கள் மேல் வைத்தியசாலையின் அனுமதித்தும் சுக பிரசவம் நடைபெறவில்லை அதுவும் இத்தாயிற்கு இக்குழந்தையே முதலாவது பிரசவம் இதைதான் தலப்பிரசவம் என்கின்றார் இதனால் எத்தனை கவனத்துடன் வைத்தியர் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள்தான் நோயாளியிடத்து பொறுப்பற்று காணப்படும் போது கணவனாகிய தாமாவது தமது மனைவி மீதான அவதானத்துடன் இவர்களிடம் கேட்கும் போதெல்லாம் தாயின் சிசு வரும் யோனி வழி மூடியுள்ளதாக பதிலழிப்பார்கள் .இதனால் தாங்கள் சுகபிரசவத்தில் நம்பிக்கையிழந்து
சிசேரியன்(அறுவை சிகிச்சை) மூலமாவது தாய் சேய் உயிரை காப்பாற்றுங்கள் என மகப்பேற்று விடுதி பொறுப்பான மகப்பேற்று நிபுணர் துஸ்யந்தன்(VOG)ற்கு சொல்லியும் தாமதித்து நாட்களை கடத்தி இன்று திடிரென்று ஆபத்தான நிலையை தாய் அடைந்த உடன் சத்திரசிகிச்சையில் இறங்கி சிசுவை மீட்கும் போது சிசுவின் தலை சிதைந்து சிசு பூமியில் சடலம் அவதரித்துள்ளது இதனை கண்ணுற்ற தந்தையின் உணர்ச்ச்சி சொல்லில் அடங்காத வேதனையுடன் தமது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த போது .
இதை மாதிரி கடந்தவருடம் கூட புதுக்குடியிருப்பு தாயிற்கும் நடைபெற்று ஒரு சிசுவை இழந்தார்கள் இப்பொழுது மீண்டும் அரங்கேறியுள்ளது .
இதுபற்றி இவ் வைத்தியசாலையில் பதற்றம் நிலவியதுடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் பலரிடம் எதிரொழித்த கருத்தானது .
மகப்பேற்று நிபுணர்களுக்கு மட்டக்களப்பு நகரில்(பைனியர்,சீலோம்,ஜீ.வி) ,செங்கலடி குளோபல் ஏறாவூர் கோப்ரெட்டி வாழைச்சேனை குட்வின் என ஒவ்வொரு தனியார் வைத்தியசாலை தொடங்கி பொலனறுவை வரை மறுபக்கம் களுவாஞ்சிக்குடி அஞ்சனா ,கல்முனை கிரேசியன் ,மிடிலன்ட் ,அக்கரைப்பற்று அம்பாரை நகர் வரை ஒவ்வொரு இடத்திலும் உள்ள தனியார் வைத்தியசாலை யில் சேர்த்து நாளொன்றுக்கு 15 சிசேரியன் செய்து கோடிகணக்கில் பணம் சம்பாதிக்கதான் நேரம் போதும் அரச வைத்தியசாலையில் தங்கிருந்து நேயாளிகளை பார்வையிட நேரம் வேணுமே????





