கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரியைக் காணவில்லை!! யுத்த நடவடிக்கை போல் தேடுதல்!! (Photos)
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி போலீஸ் சாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அன்றைய தினம் 14.09.2023அதிகாலை ஆறு முப்பது மணி அளவில் கிளிநொச்சி போலீஸ் நிலையத்திலிருந்த(03) போலீஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்ற பொழுது அங்கு சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர் அவர்களை துரத்திச் சென்ற மீண்டும் எட்டு முப்பது மணி அளவில் போலீசார் திரும்பி உள்ளனர் திரும்பிய பொழுது இரண்டு போலீசார்களே அவ்விடத்தில் ஒன்று கூடினர் அதில் ஓர் போலீசாரை காணவில்லை இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய போலீசார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் போலீசார் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்




