சுவிஸ் போதகரைப் பாதுகாக்க சுமந்திரன் செய்த சதி!! (விரிவான அதிர்ச்சித் தகவல்கள் இதோ)

 சுமந்திரனே சுவிஸ் போதகரையும் குறித்த பிரிவான கிறீஸதவ சபையையும் காப்பாற்றுவதற்காக குறித்த சபையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு அவரால் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி குடும்பஸ்தர் மீது கதையை திசை திருப்பி விட்டுள்ளதாகவும் சுவிஸ் போதகருடன் திரிந்தவர்களை தற்போதும் பாதுகாத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாது சட்ட அச்சுறுத்தல் விட்டதாகவும் சுகாதரா அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித் ஓதிய தண்ணீரை விமாத்தில் இருந்து ஊற்றி கொரோனாவுக்கு இலங்கை அரசு வேறு லெவல் வேலை!!!(Video)

சுவிஸ் பாதர் மீதும் அவரது சீடர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் தான் அவர்களுக்கு சார்பாக வாதிட்டு நடவடிக்கை எடுப்பவர்களை சிறைக்குள் தள்ளுவேன் என சுமந்திரன் சிலரிடம் அச்சுறுத்தல் விட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமந்திரனும் குறித்த சபையைப் போன்ற ஒரு கிறீஸ்தவ சபையின் பிரதானி என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு சுமந்திரன் மீது சந்தேகம் எழுந்துள்ள வேளையில் கூட்டமைப்பினைச் சேர்ந்த பலரும் மௌனமாக உள்ளதும் மிகுந்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதே வேளை கீழே உள்ள அனைத்து தகவல்களும் மேற்படி சந்தேகத்தை மையமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த மத அமைப்பு தனது அங்கத்தவராக உள்ள ஊடகவியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் மூலம் இணையத்தளம் ஒன்றை உடனடியாகப் பதிவு செய்து அந்த இணையத்தளத்தில் தாவடி குடும்பஸ்தராலேயே கொரோனா சுவிஸ் போதகருக்கு தொற்றியதாக பதிவு செய்து  அதனை முகப்புத்தகத்தில் பெருமளவும் நிதி செலுத்தி விளம்பரப்படுத்திய தகவல்களும் வெளியாகியுள்ளன. அந்த ஐடியாவும் சுமந்திரனே கொடுத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பு – இந்த சந்தேகங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு சுமந்திரன் விளக்கம் அளிக்க முற்பட்டால் அவற்றையும் நாம் பிரசுரிப்போம்…..

யாழ்.குடாநாட்டு மக்கள் முற்றாக கொரோனோ அச்சத்தில் முடங்கியிருங்க மிகப்பெரும் உண்மையினை மறைக்கும் நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது.

இதன் பிரகாரம் சுவிஸிலிருந்து வருகை தந்த போதகரிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கவில்லையென யாழ்.காவல் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு நேரடியாக தொலைபேசி வழி பேட்டியொன்றை இன்று வழங்கியுள்ளார்.

இதனிடையே இக்காவல்துறை அதிகாரியே வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை இவ்விடயத்தில் அச்சுறுத்தியிருந்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

கொரோனோ நோயாளிகளை வைத்தியசாலைக்கு அனுமதிக்காமை மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மூடி மறைத்தமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சக வைத்திய நிபுணர்களது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இதன் பின்னரே தாவடியை சேர்ந்த முதலாவது கொரோனோ தொற்றுக்குள்ளான நோயாளி பற்றிய தகவல்கள் பணிப்பாளரிடமிருந்து வெளியாகியிருந்தது.

டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வாயே திறந்திருந்தராத பணிப்பாளர் சுமார் இரு மணி நேரத்தின் பின்னர் முதல் நாளிரவு கிடைத்த அறிக்கையினை கசிய விட்டிருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய மத போதகரை காப்பாற்றவும் பெருமளவு பணம் வாரி இறைக்கப்படுவதுமான குற்றச்சாட்டில் யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி நேரடியாக சிங்கள தொலைக்காட்சிக்கு இன்று மத போதகரிற்கு தொற்று இல்லையென பேட்டியளித்துள்ளார்.

குறிப்பாக தாவடியை சேர்ந்த பொதுமகனிற்கே கொரோனா தொற்று இருந்தது,அவர் மதபோதகரை சந்தித்தமையால் மத போதகரிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதென நிறுவ தற்போது முழு வீ;ச்சில் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கேதுவாக தாவடி பொதுமகனால் ஏற்பட்ட நோய் பரம்பல் பற்றிய மருத்துவ அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு கதையினை திருப்பி விட முயற்சிகள் மும்முரமடைந்திருப்பதாக போதனா வைத்தியசாலையின் உள்ளக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேதுவாக மருத்துவ அறிக்கைகள் சில முன்கூட்டியும் ஏனையவை தாமதித்தும் வெளியிடப்படுவதாக சொல்லப்படுகின்றது.

குறித்த மத போதகர் ஆராதனையில் பங்கெடுத்த போதும் கடுமையான காய்ச்சலுடன் இருந்துள்ளதுடன் ஒலி வாங்கியை கூட கையில் வைத்திருக்க முடியாது திண்டாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இயலாமை காரணமாக அவர் அவசர அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார்.

இதனிடையே குறித்த மத போதகர் வருகை தந்தமை மற்றும் திரும்பி சென்றமை காவல்துறை ஆசீர்வாதத்துடன் நடந்ததாக பகிரங்கமாகவே வடக்கு ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


I இந்;நிலையில் கதையினை மாற்றியெழுத வழமையான இலங்கை காவல்துறை பாணியில் நேரடியாக ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பேட்டி மற்றும் போதனா வைத்தியசாலை பணிப்பாளரது நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் சந்தேகத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கை காவல்துறை ஊடக பேச்சாளர் தவிர்ந்த எவரும் நேரடியாக ஊடகங்களிற்கு செவ்வி வழங்கமுடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)