யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 25 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தியாவசிய பொருட்களுடன் வந்த லொறியில் கஞ்சா கெரோயின் ஐஸ் போதைப்பொருட்கள்!!!
கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.மேலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில்
இன்று மாலை 10 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
இதே வேளை நாளையிலிருந்து வீதிகளில் நடமாடுபவர்கள் தங்களால் விசேடமாக கவனிக்கப்பட்டு தங்கள் பாணியிலான தடுப்பு மருந்து கொடுக்கப்படும் என பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.





