யாழில் சாராய வெறியில் ரீச்சருக்கு பொலிசார் செய்த கேவலம்!! தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதி!!
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து
படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும்
ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று
மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும்
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண்
ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர்.
இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம்
இருவரும் போதையின் உச்சத்தில் மருத்துவமனையில் இருந்த அலுவலர்களுடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ
முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசியதால் குறித்த
தாதியர்களும் ஒதுங்கிக் கொண்டனர். இந்த விடயம் மருத்துவமனையின்
பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.