புதினங்களின் சங்கமம்

தீவக மக்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்ற தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நiடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

கொரோனா தாக்கத்துக்கு ஆளான முதலாவது இலங்கை நபர் செய்துள்ள நல்ல காரியம்

குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை 27 ஆம் திகதி தீவகத்தைச் சேர்ந்த மருத்துவ கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரையிலான நேரத்திற்குள் 0212222268 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைத்த்து தெரிவிக்குமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.

அவ்வாறு தெரிவிக்குமிடத்தே உங்களுக்கு தேவையான மருந்துகள் உங்களது பிரதேசத்திற்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாளை திவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்டள்ளார்.