புதினங்களின் சங்கமம்

முன்னாள் கடற்படை தளபதி அதிரடி கைது!! 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஹெர பகுதியில் நபர் ஒருவரை கடத்தி கொலை செய்ய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிஷாந்த உலகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது