Drinks

கொறோனா அவலம்!! மரக்கறி வியாபாரத்தில் இறங்கி ஈ.பி.டி.பி கொள்ளை லாபம் அடிக்கின்றது!!

 

Oleifera Export PVt Ltd என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அந்த நிறுவனத்தின் ஊடக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தாவின் தம்பி மரக்கறி வியாபாரத்தை ஆரம்பித்து கொள்ளை லாபம் பெற முயல்வதாக ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் 8 கிலோ கிராம் நிறை உடைய 8 வகையான மரக்கறிகள் அடங்கிய பொதி ஒன்றின் விலை 1500 ரூபா எனவும் 8 வகையான மரக்கறிகள் அடங்கிய 4 கிலோகிராம் நிறையுடைய பொதி ஒன்றின் விலை 750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. மக்கள் பெரும் இன்னலில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் அமைச்சரின் தம்பி இவ்வாறான வியாபாரத்தை ஆரம்பித்திருப்பது அமைச்சருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை குறைத்து விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் மக்களுக்கு அரசியல்தலைவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அமைச்சரின் தம்பி இவ்வாறு காசு உழைக்க நினைப்பது பெரும் கேவலம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சமுகவலைத்தளங்களில் கடும் கருத்துப் பதிவுகள் வெளியாகியுள்ளது.