Home புதினங்களின் சங்கமம் யாழில் குடும்பஸ்தர் பெண் ஆசையால் நிர்வாண நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? (Photos)

யாழில் குடும்பஸ்தர் பெண் ஆசையால் நிர்வாண நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? (Photos)

யாழில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள காளி  கோவிலுக்கு அருகில் உ்ள்ள வீடொன்றில் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் சாமத்திய சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் அவ் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த குடும்பஸ்தர் கொடிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்றும்  யாழ் பல்கலை்கழகம் மற்றும் அபான்ஸ் போன்றவற்றில் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் காவலாளியாக இருந்துள்ளார். தற்போது அவர் வேலைக்குப் போவதில்லை என்றும் கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தரின் அண்ணனின் மகளின் சாமத்தியவீடு குடும்பஸ்தரின் சொந்த இடமான கொடிகாமத்தில் நடந்துள்ளது. அந்த சாமத்தியவீட்டுக்கு மனைவியுடன் சென்ற குடும்பஸ்தர் மனைவியை அங்கு விட்டுவிட்டு கல்வியங்காட்டுக்கு வந்துள்ளார். அத்துடன் ஆடு வாங்கி கொடிகாமத்தில் விருந்து வைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று இவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளது.

அத்துடன் குடும்பஸ்தர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. குடும்பஸ்தர் விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் அரைகுறையாக சாப்பிட்ட உணவு மீதி இருந்து்ளளது,

இது தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் வீட்டிற்கு அண்மையிலுள்ள இளம் குடும்பஸ்தர் ஒருவரே பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், தனது வீட்டிற்கு அண்மையிலுள்ள வீடொன்றிற்கு சென்று வருவதாகவும், நேற்று மதுபோதையில் அந்த வீட்டு பெண்ணின் மகளின் கையை பிடித்து இழுத்ததாக, பெண்ணின் கணவன் அறிந்து, நண்பர்கள் சிலருடன் வீடு புகுந்து அடித்துக் கொன்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

கொலைச்சந்தேகநபரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்