புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது!!

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 91 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாள் முடிவில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 86 ஆக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் இதுவரை 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொரோன தொற்றுக்கு உள்ளான இரண்டு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 225 பேர் நாடு பூராவும் உள்ள 18 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு பூராகவும் 45 தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையங்களில் 3506 கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்று காலை இலங்கையில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் ( சுற்றுலா வழிகாட்டி) பூரணமாக குணமான நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.