கொரோனா வைரசுடன் யாழ்ப்பாண அரச அதிபர் கள்ளத் தொடர்பு!!
கொரோனா வைரசுடன் யாழ்ப்பாண அதிபருக்கு கள்ளத் தொடர் உள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதனை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்ப்பாண அரச அதிபரே… உங்களுக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. நீங்கள் ஏன் அவற்றை பாவிக்காது இருக்கின்றீர்கள். கொரோனா தொடர்பாக உங்களுக்கே இன்னும் விளிப்புணர்வு ஏற்படவில்லையா?? அல்லது உங்களுக்கும் கொரோனாவுக்கும் இடையில் கள்ளத் தொடர் உள்ளதா??
கொரோனா என்ற பயங்கர தொற்று வியாதி எப்படி மக்களை சென்றடைகின்றது என அனைத்து டொக்டர்மாரும் சொல்லிக் களைத்துவிட்டார்கள். ஆனால் யாழ்ப்பாண முட்டாள்சனங்கள் அதை காதில் விழுத்துவது போல் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ஐஸ்கிறீம்கடைகள் தேவைதானா??
ஐஸ்கிறீம் மக்கள் அத்தியாவசிய தேவையா?? பான்சி கடைகள் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான கடைகளா??
யாழ்ப்பாண வர்த்தசங்கத்தில் உள்ளவர்கள் பெருச்சாளிகள் என பலரும் சொல்கின்றார்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறி உங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்களா??
அல்லது தற்போது உள்ள மேலதிக அரச அதிபரான பிரதீபன் பயங்கர ஊழல்பேர்வழி என முந்தைய காலத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அவர் தற்போது கோத்தா அரசாங்கம் வந்தவுடன் திருந்திவிட்டாரா??
அல்லது அவர் உங்களையும் தனக்கு சார்பாக மாற்றிக் கொண்டு பல்தேசிக் கம்பனிகளிடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணத்தை கொரானாவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்றாரா??
எதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள ஐஸ்கிறீம் கடைகளை மூடாமல் உள்ளீர்கள்?? அவர்களது பொருளாதாரம் பாதிப்படைந்துவிடும் என்றா?? அவர்கள் கொழுத்த பணக்காரர்கள். ஐஸ்கிறீம் கடை மூடுவதால் அவர்களுக்கு எந்தவித இழப்பும் வரமாட்டாது. ஆக வருமானம் கொஞ்சம் குறைவாகவே வரும். அப்படி இருக்கும் போது ஏன் நீங்கள் அவற்றை மூடும்படி உத்தரவு போடாது உள்ளீர்கள்??
கோயில்களையே மூடும்படி சொல்லும் உங்கள் அதிகாரிகள் ஐஸ்கிறீம்கடைகள் போன்றவற்றை ஏன் திறந்து வைத்திருக்க விட்டு வைத்திருக்கின்றார்கள்??
யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புபட்ட வர்த்த நிலையங்களை தவிர மற்ற எல்லாவற்றையும் மூடச் சொல்லி ஏன் நீங்கள் உத்தரவு போடவில்லை??
யாழ்ப்பாண மாநகரசபை மேயர் ஒரு அங்கிடுதத்தி….. யார் காசு கொடுத்தாலும் அல்லது யார் தனக்கு ஏதாவது வருமானம் வரும்வகையான செயற்பாடுகளைச் செய்தாலும் அதுக்கு சார்பாக வக்காளத்து வாங்கிறதே அவரது செயற்பாடு….. அவர்களைப் போன்றவர்களை எல்லாம் நீங்கள் ஆதரித்து செயற்படுகின்றீர்களா??
நீங்கள் ஆளுமை அற்றவர் என்றும் உங்களை மேலதிக அரசாங்க அதிபரான பிரதீபனே கொண்டு நடா்த்துறார் என்றும் உங்களது மாவட்ட செயலக ஆளுகைக்கு உட்பட்ட உயர் அதிகாரிகளே பலருக்கும் தெரிவிக்கின்றார்கள். கொரானா தொடர்பாக தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளையும் நீங்கள் தடுத்து நிறுத்த முற்படுகின்றீர்கள் என குற்றச்சாட்டும் எழுப்புகின்றார்கள்…. இவை எல்லாம் உண்மை???
இவ்வாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார்.
குறிப்பு – இது தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளர் ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பின் அல்லது மறுப்பு தெரிவிக்க விரும்பின் எமது [email protected] என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது newtamils என்ற பேஸ்புக் உட் பெட்டிக்கோ தங்களது அறிக்கையை அனுப்பலாம்….
இந்த வரைபு யாழ் அரச உயரதிகாரிகளின் கவனத்துக்கு ……………………….


