கொரோனா அச்சுறுத்தல்!!! அடங்காமல் திரிபவர்களுக்கும் வீட்டில் இருக்க முடியாதவர்களுக்கும் இலங்கை பொலிஸ் வைக்கப் போகும் ஆப்பு!!
இது பேஸ்புக்கில் வந்த ஒரு தகவலாகும். இதன் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை.
வீட்டில் இருக்க முடியாதவர்களுக்கு போலிஸ் #எச்சரிக்கை
அனைவருக்கும் இந்த தகவலை செயார் செய்யவும்!
03-18-2020 ஆம் திகதியில் இருந்து
இலங்கையில் அமுலுக்கு வரும் #விசேட_ஒழுங்கு_சட்டம்.
ஒவ்வொரு போலிஸ் பிரிவிலும் இரண்டு சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது, ( 499 சாவடிகளுக்கு பதில் 998 சோதனை சாவடிகள்
இந்த சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படும், தகுந்த காரணிகள் இன்றி
(புனித யாத்திரை, சுற்றுலா, ஏனைய பயணங்கள்) பயணிப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில்,
01 பயணம் செய்யும் வாகனம் போலிஸ் வசப்படுத்தப்படும்
02 வாகன சாரதிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
03 வாகன உரிமையாளருக்கு வழக்கு பதிவு செய்யப்படும்
04 வாகனத்தை இருந்த அனைவரும் கட்டாயமாக Quarantine Center என்று அழைக்கப்படும் தனிமைப்படுத்தி கண்காணிப்பு செய்யப்படும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
05 வாகனத்திற்கு route permit (ரூட் பேர்மிட்) இருந்தால் அது இரத்து செய்தப்படும்
எந்தவொரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்
Sources
அத தெரனை அலுத் பார்லி மேந்துவ, 03-18-2020
ஸ்குல் லீவு, வேலைக்கு லீவு
என்றுன்கூறிக் கொண்டு ட்ரிப் (Trip), மீன் பிடிக்கச் செல்வது, மலை ஏறச் செல்வது (Hiking – புது ட்ரெண்ட்) என வீட்டில் இருக்க முடியாமல் கிளம்ப தயாரக இருக்கும் அனைவரும் இதனை கட்டாயம் வாசித்துக் கொள்ளவும்.
வாலிபர்களை தயவு செய்து வீட்டின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்,
அதே போல் சில வீடுகளில்
இருக்கும் பெண்மணிகளுக்கு ஒரு லீவு கிடைத்து விட்டால் போதும்,
தங்கச்சி ஊடு, உம்மா ஊடு, மைனி வீடு என்று
எங்காவது அனைத்தையும் கட்டிக் கொண்டு கிளம்பி விட வேண்டும், இல்லையோ வீட்டில் கணவன் இருந்து முடிந்து விடும்.
ஒன்றை புரிந்து கொள்ளவும்
இது ஜாலி கொண்டாட BBQ போடவோ, கூட்டம் குடும்பம் ஒன்று சேர்ந்து கும்மாளம் போடவோ தரப்பட்ட விடுமுறை அல்ல.
அதி வேகமாக பரவிக் கொண்டு
இருக்கும் நோய் முழு நாட்டினையும் #சிவப்பு_வலையம் ஆக்கி விடக்கூடாது என்பதற்காக வேண்டி,
அனைவரும் தத்தமது வீடுகளோடு
இருந்து கொள்ளவும் என்பதற்காக தரப்பட்ட விடுமுறை என்பதை தயவு செய்து அறுவுள்ளவர்களாக புரிந்து நடந்து கொள்ளவும்.
இல்லை எங்களுக்கு
அப்பஇ இருக்க முடியாது, ஜெயில் ல போல இருக்க ஏழுமா? சும்மா பயந்து சாக ஏழுமா என்று எல்லாம்
மக்குகள் போல் பல்லை காட்டி
சிரித்துக் கொண்டு திரியாதீர்கள். இந்த நோயினை ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் நோய்க் காவிகளாகிய நாம்,
ஒரு இடத்தில் இருக்கும் வரை
நோய் தொற்றின் வேகம் குறைந்து கட்டுப்பாட்டிற்கு வரும் அதற்காகவே பல இடங்கள் Lockdown செய்யப்படுகிறது.
அவிழ்த்து விட்ட எதோ
ஒன்றை போல் நாமும் மேயத் தொடங்கி நோய் பரவினால், முழு நாடும் அடைக்கப்பட்டால், பலர் பட்டினியால் ……… வரும் என்பதை புரிந்து கொள்ளவும்.
தேவை அற்ற பிரச்சினைகள்,
சட்ட சிக்கள்கள், சமூக வலை தள வசைபாடல்கள் என்று இன்னும் பலதையும் சம்பாதித்துக் கொள்ள வரும் என்பதையும் புரிந்து கொள்வோம்!

