புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்று அச்சம்!! தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மஹிந்தவின் மகன்.!!

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

நேற்று செவ்வாய்க்கிழமை காலை , தியத்தலாவையிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்றுவரை 43 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் நிலைமையை மறைக்கின்றமை மற்றும் அதற்கு உதவி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது .