Vampan memes

வடமாகாண கல்வி வீழ்ச்சிக்கு காரணங்களாக சொல்லப்படும் 10 காரணிகள்.

போர், கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை, அர்ப்பணிப்பிலாத ஆசிரியர் அதிகாரிகளின் பங்களிப்பு, மூளைசாலிகளின் வெளியேற்றம் என்பன எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள். இங்கு குறிப்பிட்ட 10ம் முக்கியமானவை. இவற்றிற்கு என்ன தீர்வு என்பதையும் இங்கு குறிப்பிடுங்கள். இந்த 10ல் பல வேறு மாகாணங்களுக்கும், ஏன் வேறு நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் இவற்றின் தாக்கத்தை ஓரளவுக்கு அங்கு பெற்றோர், சமூக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசாங்கம் மூலம் கட்டுப்படுத்துவதால் வெற்றியடைகின்றனர். உங்கள் பரிந்துரைகளையும், ஏற்கனவே சில சமூக நிறுவனங்கள் , சமூகசேவையாளர்கள், சமுதாய மருத்துவர்கள் செய்யும் உளவள மேம்பாட்டு திட்டங்களையும் சேர்த்து ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறோம். தயவுசெய்து உங்கள் பரிந்துரைகளை இலக்கம் போட்டு எழுதுங்கள். உதாரணத்திற்கு யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் கணித, விஞ்ஞான , ஆங்கில பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக e-கல்வி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அது போல் இந்த பரிந்துரைகளை ஒரு விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டு பாடசாலை, சனசமூக நிலையங்கள், தொலைக்காட்சி மூலம் எல்லோரையும் சென்றடைய செய்யலாம். வாருங்கள் வடம் பிடியுங்கள்.
1.கண்டிப்பு அற்ற பிள்ளைவளர்ப்பு
2.சின்னத்திரைகளுக்கு அடிமையாகிப்போன பெற்றோர்
3.சுதந்திரமான (வடிகட்டல்கள் Filter) இல்லாத இணையப்பாவனை.
4.திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட போதை வியாபாரம்.
5.பாடசாலை ஆசிரியர்களை கேலிசெய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள்.
6.சட்டத்தை மதிக்காத பொலிசார்(லஞ்சம்).
7.சாரதி அனுமதிபத்திரம் பெறும் வயதுக்கட்டுப்பாட்டில் சட்டரீதியான தளர்வு.
8.இளவயதுத் திருமணங்களின் அதிகரிப்பும் அதன் விளைவாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வயதில் காணப்படும் இடைவெளி குறைதல்
9.பயனற்ற ( பார்வையாளர்களை சோம்பேறிகளாக்கும்) துடுப்பாட்டமும் அதன்மீது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகமும்.
10.வெளிநாட்டிலிருந்து வருவோரின் பகட்டுவாழ்வுக் காட்சிகள்.
Copied- Nadarasha Punchadsaralinkam