Vampan memesபுதினங்களின் சங்கமம்

கோத்தாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார் யாழ்ப்பாண வடிவேலு!! சந்தோசத்தில் கலாஅக்கா!!

 

யாழில் கோத்தபாயவின் ஆட்களால் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என கடந்த காலங்களில் ஊடகங்களிலும் ஊடக அமையத்திற்கும் சென்று கத்திக் குளறித்திரிந்த யாழ்ப்பாண வடிவேலு என மக்களால் அழைக்கப்படும் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஐ.தே.கவின் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளார். ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் கோத்தபாயாவின் ஆதரவுக்காக கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்துள்ளதுடன் நல்லுார் கந்தசுவாமி கோவிலில் கோத்தபாய வெல்லவேண்டும் என்று பூசையும் நடாத்தவுள்ளார்.

தனது அண்ணனைப் புலிகள் கொலை செய்யவில்லை ஈ.பி.டி.பியினரே கொன்றனர் என பத்திரிகைகளில் அறிக்கை விடுத்தும் கோத்தபாயா தொடர்பாக தனது முகப்புத்தகங்களில் கேவலமான பதிவுகளை இட்டும் வடிவேலு பாணியில் பல செயல்கள் செய்துவந்த துவாரகேஸ்வரன் கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பதையிட்டு பொதுமக்கள் பெரிதும் அக்கறைப்படமாட்டார்கள் எனினும் யாழ்ப்பாணத்தில் துவாரகேஸ்வரன் செய்த பல கேவலமான செயல்களால் விரக்தியில் இருக்கும் பெருமளவான மக்கள் இவன் ஆதரவு கொடுக்க முற்படும் கோத்தாவுக்கு எதிராக செயற்படுவார்கள் என்பதை கோத்தபாயவிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

யாழ்ப்பாண வடிவேலு கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பதால் ஆகக்கூடியது 50 வாக்குகளே கோத்தாவுக்கு விழலாம். ஆனால் துவாரகேஸ்வரனின் ஆதரவால் ஆயிரக்கணக்கான வாக்குகளை கோத்தா இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என யாழ் கோத்தா ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வியாழ மாற்றம் நடைபெறும் நேரம் சனியன் தொலைந்துவிட்டது என விஜயகலா சந்தோசத்தில் இருக்கும் அதே வேளை கோத்தாவிற்கு வியாழமாற்றம் யாழ்ப்பாணத்தில் சனியனால் அலங்கோலப்படப்போகுது என கோத்தா ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.