பெட்டை இயக்கத்துக்குப் போட்டாளாம் –தேவன்

பெண்விடுதளை பற்றி ஆயிரம் விஞ்ஞான விளக்கங்கள் உலகிலுள்ளோர் கொடுக்கலாம். ஆனால் தமிழீழ மண்ணின் பெண்நிலை பற்றி விளக்கம்கொடுக்க சமூகத்தின் இயல்பு நிலையை எழுதினாலே போதுமானது.

ஈழத் தமிழ்க்குடும்பத்தின் வாழ்க்கை வரையறைக்குள் இருந்து ஒரு பெண் தானாக வெளியேறித் திருமணம் முடித்தால் “ஓடிவிட்டாள்” என்ற அடைமொழி வழங்கப்பட்டுவிடும். தன்னிலை மறந்து நிற்பவர்களை “ஆட்டக்காரி” என்று ஒருவருக்கொருவர்” வேலிக்கதை” பேசிக்கொள்வதும் இருந்திருக்கிறது. தனியே வீட்டைவிட்டு எங்கேயும் அனுமதிக்கப்படாத பெண்களே தமிழீழத்தின் பெரும்பான்மை.

வீடுகளை விட்டுக் காடுகளில் வாழ்ந்தபோதும் பெண்களின் தனிப்பெருமை தவறாது பாதுகாத்த “உலகின் ஒற்றை ஆண்” என்ற பெருமை பிரபாகரனுக்கு உண்டு. சமூகநடைமுறையை உடைத்தெறிந்த பிரளயப்பெருக்கு, பிரபாகரனாக நின்று தமிழினத்தின் பெண்மையை உலகிற்கு அறிமுகம்செய்தது.

எம்மண்ணில் “இயக்கத்துக்குப் போட்டாளாம்” என்பது; ஓர் தமிழ்ப்பெண் தன்னை உலகின் முதற்பெண்ணாக அடையாளம் செய்துகொண்டு ஒழுக்கமும் வீரமும் ஆளுமையும் நிறைந்த வாழ்வை வாழ ஆரம்பித்துவிட்டாள் என்பதுவே …!

#இயக்கத்துக்குப்போட்டாளாம்

-தேவன்

error

Enjoy this blog? Please spread the word :)